முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தீவிர கண்காணிப்பு சோதனையில் காவல்துறையினர்

முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
சென்னை (கோப்புப்படம்)
பகிர்:

முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் கரோனா பரவல் மிகவேகமாக அதிகரித்து வருவதை அடுத்து, கடந்த மே 10 முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் ஊரடங்கை மேலும் கடுமையாக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். 

இதையடுத்து முழு ஊரடங்கை அமல்படுத்தும் நோக்கில் சென்னையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் முழு பொதுமுடக்க உத்தரவை மீறுபவா்கள் மீது மே 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே, பொதுமக்கள் அரசின் கரோனா விழிப்புணா்வு அறிவுரைகளைப் பின்பற்றி சட்டப்பூா்வமான நடவடிக்கையில் இருந்து தவிா்த்துக் கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.