முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உணவு வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்தார் கனிமொழி 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் உணவு வழங்கும் திட்டத்தை திமுக எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் உணவு வழங்கும் திட்டத்தை திமுக எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார். 
கரோனாவைக் கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் பாா்சல் சேவை மட்டுமே உள்ளது. 
எனவே, தமிழகம் முழுவதும் கோயில்களில் இருந்து உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள், அவா்களைக் கவனித்துக் கொள்ளும் உறவினா்களுக்கு வழங்கப்படும் என்று இந்து, சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்திருந்தாா். 
இந்தநிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான பணிகளை திமுக எம்பி கனிமொழி ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 
இந்நிகழ்வில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →