தமிழ்நாடு

குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்க மத்திய அரசு முயற்சி: அன்பில் மகேஷ்

DIN

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை தமிழகம் புறக்கணித்ததா என்பதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பா,  திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியது:

புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பது போல் இருப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

கூட்ட அறிவிப்பு குறித்து நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தோம். ஆனாலும் எவ்வித பதிலும் வரவில்லை. எனவே கூட்டத்தில் பங்கேற்கவில்லை இதனால் நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என புரிந்து கொள்ளக் கூடாது.

கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மெயிலுக்கு எவ்வித பதிலும் வரவில்லை. பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்.

வராத பட்சத்தில் தில்லிக்கு சென்று எங்களுடைய கருத்துகளை முன்வைக்க உள்ளோம். புதிய கல்வி கொள்கை பாதகமானது. குலக்கல்வித் திட்டத்தை நினைவுபடுத்துகிறது.

இதனை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. மாணவர் நலனே முக்கியம். மோதல் போக்குடன் இல்லாமல் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறோம்.

நாங்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்றுக் கொண்டால் புதிய கல்விக் கொள்கையை ஏற்போம். புதிய கொள்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ஏற்பதாக இல்லை.

இருமொழி கொள்கையே அண்ணாவின் கொள்கை. சட்டமன்றத்தில் முதல் குரலாக நீட்டுக்கு எதிராக எங்கள் குரல் எதிரொலிக்கும். இது குறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மீண்டும் இந்த தீர்மானம் வலியுறுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT