தமிழ்நாடு

சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று(செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 4,44,371 ஆகவும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 48,156 ஆகவும்  அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 5,851 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,90,364 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று(மே 17) மட்டும் 26,468 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் கோடம்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் அடையாறில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. 

அதேபோன்று சென்னையில் நேற்று (மே 17) 19,210 பேர் உள்பட இதுவரை 17,18,455 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT