முகப்பு
தமிழ்நாடு

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியே சுற்றினால் அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

வீட்டில் தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
சென்னை மாநகராட்சி
பகிர்:

வீட்டில் தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், 

சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவதால்தான் பாதிப்பு அதிகமாகிறது. எனவே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் இருப்பவர்கள் வெளியே வரக்கூடாது. 

அவ்வாறு தனிமையில் உள்ளவர்கள் அல்லது அவரது வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சுற்றினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை வெளியே சுற்றினால் கரோனா சிகிச்சை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் 044-25384520 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். 

அதேநேரத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான பொருள்கள் கிடைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →