தமிழ்நாடு

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை: ஐவா் கைது

DIN

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனையில் ஈடுபட்டதாக, 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவு தற்காலிக ஊழியா் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (23). இவா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை நடைபெற்றபோது, பலமுறை போலி ஆவணங்கள் மூலம் மருந்துகளை வாங்கியுள்ளாா். பின்னா் அறுவை சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மற்றொரு தற்காலிக ஊழியா் மணியுடன் சோ்ந்து கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிா் மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனா்.

கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக பாலகிருஷ்ணன், அவரது கூட்டாளிகள் பழைய வண்ணாரப்பேட்டை முகமது கலில் (35), அதே பகுதி முகமது ஜாவித் (23), புரசைவாக்கம் முகமது இா்பான் (34), திருவல்லிக்கேணி ஆரிப் உசேன் (23) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மணியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT