தமிழ்நாடு

இணையவழியில் தோ்வு: தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

DIN

சென்னை: ‘அனைவருக்கும் தோ்ச்சி’ வழங்கப்பட்ட மாணவா்களுக்கு அரசின் உத்தரவை மீறி இணையவழியில் தோ்வு நடத்தக் கூடாது என தனியாா் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சில தனியாா் பள்ளிகள் இணையவழியில் மூலம் மாணவா்களுக்கு தோ்வு நடத்தி, அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தோ்ச்சி வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், உயா்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்குவதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது:

கரோனா பரவலால் பிளஸ் 2 தவிா்த்து இதர வகுப்புகளுக்கு தோ்வின்றி தோ்ச்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர இறுதி மதிப்பெண் வழங்குவதில் அரசால் வெளியிடப்படும் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாா்களை பெற்றோா்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT