முகப்பு
தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: மே 22-ல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சி உறுப்பினர் குழுவுடன் மே 22-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சி உறுப்பினர் குழுவுடன் மே 22-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில், விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்பட 13 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். 

கரோனா பரவல், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது உள்ளிட்டவை தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய 13 பேர் கொண்ட குழு கடந்த வாரம் அமைக்கப்பட்டது.

சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, அவர்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.