தமிழ்நாடு

தம்மம்பட்டியில் நடமாடும் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் நடமாடும் உழவர் சந்தை திட்டம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கப்பட்டது.  

தம்மம்பட்டியில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. கரோனா தொற்று வேகமாக பரவுவதையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் காய்கறி சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டதை அடுத்து வியாழக்கிழமை முதல் தம்மம்பட்டி உழவர் சந்தை மூடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து தம்ம்ம்பட்டியில் வேளாண் துறை சார்பில் நடமாடும் உழவர் சந்தை திட்டத்தை பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தர மூர்த்தி தொடக்கி வைத்தார். இதில் 12-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகளை விற்க அனுப்பப்பட்டது. 

மறு உத்தரவு வரும் வரையில் இனி அனைத்து தெருக்களுக்கும் சென்று காய்கறி விற்பனை செய்வது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT