சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய நிர்வாகிகள். 
தமிழ்நாடு

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவுதினம் அனுசரிப்பு 

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் சங்ககிரியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் சங்ககிரியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி பொதுமக்களுக்கு 50 ஆயிரம் முககவசம் வழங்கும் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன. 

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மேற்கு மாவட்டத்தலைவர் சி.எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

அதனையடுத்து கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக  சேலம் மேற்கு மாவட்ட முழுவதுவம்  உள்ள பொதுமக்களுக்கு 50 ஆயிரம் முககவசங்கள் வழங்கும் பணிகளை மாவட்டத்தலைவர் தொடக்கி வைத்தார்.  சங்ககிரி ஆர்.எஸ்., வேங்கிபாளையம், தேவூர் உள்ளிடட் பகுதிகளில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தேவூரை அடுத்த  புள்ளாகவுண்டம்பட்டி புளியம்பட்டியில்  உள்ள மனவளர்ச்சி குன்றிய ஆதவரற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கினர். 

ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்ககிரி வட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சி நகரச் செயலர் எ.ரவி, நிர்வாகிகள் ஜி.ஆறுமுகம், ஜெகநாதன், ஆறுமுகம், சந்திரன், இளைஞர்காங்கிரஸ் கட்சி நிர்வாகி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இதில் கலந்த கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவிநாசி: பட்டா வழங்கிய இடத்தில் உரிய அளவீடு செய்து தரக் கோரி போராட்டம்

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!

'நான் பொறுப்பேற்க முடியாது' - நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்

கரூர் பலி மனிதனால் நடந்த பேரழிவு! என்ன மாதிரியான கட்சி இது? உயர் நீதிமன்றம் கண்டனம்

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

SCROLL FOR NEXT