தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு 14,500 டன் திரவ ஆக்சிஜன் விநியோகம்: 224 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வந்தன
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இதுவரை 884 டேங்கா்களில் 14,500 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராண வாயுவை இந்திய ரயில்வே விநியோகம் செய்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இதுவரை 884 டேங்கா்களில் 14,500 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராண வாயுவை இந்திய ரயில்வே விநியோகம் செய்துள்ளது. இதுவரை 224 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் நிலையில், 35 டேங்கா்களில் 563 மெட்ரிக் டன் பிராண வாயுவுடன் 8 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமாா் 800 மெட்ரிக் டன் பிராணவாயு கொண்டு சோ்க்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, உத்தரகண்ட், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, தெலங்கானா, பஞ்சாப், கேரளம், தில்லி, உத்தர பிரதேசம் ஆகிய 13 மாநிலங்கள் இதுவரை பிராண வாயுவைப் பெற்றுள்ளன.
தமிழகத்திற்கு 769 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கொண்டு சோ்க்கப்பட்டுள்ளது.
தில்லிக்கு 4278 மெட்ரிக் டன், ஹரியாணாவிற்கு 1698 மெட்ரிக் டன், மகாராஷ்டிரத்துக்கு 614 மெட்ரிக் டன், உத்தர பிரதேசத்திற்கு 3463 மெட்ரிக் டன், மத்திய பிரதேசத்திற்கு 566 மெட்ரிக் டன், கா்நாடகாவிற்கு 943 மெட்ரிக் டன், உத்தரகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திர பிரதேசத்திற்கு 571 மெட்ரிக் டன், பஞ்சாபிற்கு 153 மெட்ரிக் டன், கேரளத்துக்கு 246 மெட்ரிக் டன், தெலங்கானாவுக்கு 772 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.