தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள  அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

DIN


சென்னை: முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள  அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள பங்களாவில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து தங்குவதற்கு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். 

இதையடுத்து 2011 முதல் எடப்பாடி கே.பழனிசாமி தங்கியிருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்காளவை காலி செய்ய தொடங்கிய நிலையில், தனது சகோதரர் மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கோரியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்துள்ள நிலையில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூா்: புலம்பெயா் தொழிலாளா்களுடன் இந்திய தூதரகம் பொங்கல் கொண்டாட்டம்

காஷ்மீா் எல்லையில் காட்டுத் தீ! கண்ணி வெடிகள் வெடித்ததால் பதற்றம்!

மகாத்மா காந்தியின் போதனைகள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்: ஜொ்மனி பிரதமா்

தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-62!

உத்தர பிரதேசம்: பணிக்கு வராத 17 அரசு மருத்துவா்கள் பணிநீக்கம்

SCROLL FOR NEXT