புதுச்சேரியில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக புதுச்சேரியிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் நாளையுடன் முடிவடையடவிருந்த ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும். அதன்படி, அத்தியாவசியக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.