கரோனா தடுப்பூசி திட்டத்தை முறையாக செயல்படுத்துக: ஓபிஎஸ்
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டம் கடந்த 20 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை திருப்பூரில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்ட பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
போதிய அளவில் கையிருப்பில் இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முறையாக கரோனா தடுப்பூசி போடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.