முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 35,483 பேருக்கு கரோனா; 422 போ் பலி

தமிழகத்தில், இன்று 35,483 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

தமிழகத்தில், இன்று 35,483 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாநில மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்கு குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,483 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5,169 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். 
அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,944 பேருக்கும், செங்கல்பட்டில் 1,982 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 25,196 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 15.27 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 94,143 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 422 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,468-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.