முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பதவியேற்பு

தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று (மே 24) பதவியேற்றுக்கொண்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பதவியேற்பு
பகிர்:

தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று (மே 24) பதவியேற்றுக்கொண்டனர். 

இதுவரை பதவியேற்காத 6 திமுக, 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் பேரவைத் தலைவா் அப்பாவு முன்னிலையில் சட்டப் பேரவை உறுப்பினா்களாக பதவியேற்றனர். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறையில் 9 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

திமுக சார்பில் சிவசங்கர், மதிவேந்தன், காந்திராஜன், வரலட்சுமி, வெங்கடாசலம் ஆகியோர் பதவியேற்றனர். 

அதிமுக சார்பில் வைத்திலிங்கம், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, இசக்கி சுப்பையா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். 

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் திமுக எம்.எல்.ஏ. சண்முகையா மட்டும் பதவியேற்கவில்லை. புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

பதவியேற்ற எம்.எல்.ஏ.க்கள் விவரம்: இங்கே கிளிக் செய்யவும்

முழு கட்டுரையைப் படிக்க →