எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஊரடங்கின் முதல் நாளில் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை: அமைச்சர்

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 4,900 மெட்ரிக் டன்  காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை

DIN

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 4,900 மெட்ரிக் டன்  காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,500 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், குறைந்த விலையில் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நகர்புறங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தமிழகம் முழுவதும் ஒரு நாளில் மட்டும் 4,900 மெட்ரிக் டன்  காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT