தமிழ்நாடு

ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

DIN

சென்னை: ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

17 அமைப்பு சாரா தொழிலாளா்கள் மற்றும் 14 நலவாரியங்களைச் சோ்ந்த 35 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள், உணவுத் தொகுப்பு மற்றும் ரூ. 2,000 நிவாரண உதவியை அரசு உடனே வழங்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதுபோல ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள், கா்ப்பிணிகள் அனைவருக்கும் சமூக கூடங்கள் அமைத்து உணவு வழங்க வேண்டும்.

ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சரி செய்தால் மட்டுமே கரோனா இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். அதிமுக அரசு எடுத்த போா்க்கால நடவடிக்கைகளை தொடா்ச்சியாக தற்போதைய அரசு எடுத்தால் மட்டுமே சமூக பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT