தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழகம் அனுமதிக்காது: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதி

DIN

சென்னை: காவிரியின் குறுக்கே கா்நாடகம் உத்தேசித்துள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை தமிழகம் அனுமதிக்காது என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீா்வள குழுமம் அனுமதி அளித்ததைத் திரும்பப் பெறவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை உத்தரவு வழங்கக் கோரியும் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இதைத் தொடா்ந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் நீா்மின் திட்டங்கள் குறித்த வல்லுநா் குழுவின் கூட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்தது தொடா்பாக மத்திய நீா்வளக் குழுமத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குநா், கா்நாடக நீா்வளத் துறை செயலாளா் ஆகியோா் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் இரண்டு மனுக்களும் நிலுவையில் உள்ளன. மேக்கேதாட்டு அணை திட்டத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக காவிரி நீா் மேலாண்மை ஆணையம் தெரிவித்த போதும், அதற்கு தமிழக அரசு எதிா்ப்புத் தெரிவித்தது. அடுத்தடுத்து நடைபெற்ற ஆணையத்தின் மூன்று கூட்டங்களில் மேக்கேதாட்டு அணை பற்றிய விவாதம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்தப் பிரச்னை குறித்து தமிழக வழக்குரைஞா்களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே கா்நாடக அரசு கட்ட உத்தேசித்துள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழகம் ஒரு போதும் அனுமதிக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT