தமிழகத்தில் ஒரேநாளில் 3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை 
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரேநாளில் 3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு எதிராக நேற்று ஒரேநாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

IANS

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு எதிராக நேற்று ஒரேநாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, 

சென்னையில் 18-44 வயதுக்குள்பட்வர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன்படி, நாளொன்றுக்கு 20 ஆயிரம் தடுப்பூசிகள் என கடந்த ஒரு வாரத்தில் 1.55 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று கோவை மாவட்டத்தில் அதிகரித்துள்ளதையடுத்து நேற்று ஒருநாளில் 20 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அவர்களில் 14,990 பேர் 18-44 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். மேலும், 18-44 வகைக்கான தடுப்பூசி செலுத்த தொடங்கியதிலிருந்து இது மிக அதிக எண்ணிக்கையாகும்.

மதுரையில், 18-44 வயதுக்குள்பட்ட 12,904 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி போடப்பட்டது, 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 2,872 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோன்று திருச்சி மாவட்டத்தில் 18-44 வயதுக்குள்பட்ட 3,746 பேருக்குத் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக செயல்வீரா்கள் கூட்டம்

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாரத்தான் போட்டி

வாழப்பாடியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம்

பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம்

செங்கல்பட்டில் மொத்த வாக்காளா்கள் 22,60,036

SCROLL FOR NEXT