சிபிஎஸ்இ 
தமிழ்நாடு

மாநில அரசுகளின் விதிகளையும் பள்ளிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும்: சிபிஎஸ்இ

மாநில அரசுகள் அமல்படுத்தும் விதிகளையும் பள்ளிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும். அதை மீறினால் பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.

DIN

மாநில அரசுகள் அமல்படுத்தும் விதிகளையும் பள்ளிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும். அதை மீறினால் பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) செயலா் அனுராக் திரிபாதி, அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசின் விதிகளை சரிவர பின்பற்றாமல் சில பள்ளிகள் செயல்பட்டுவருவது தெரியவந்துள்ளது. அதன்படி சிபிஎஸ்இ வாரிய விதிகளை மட்டுமின்றி, மாநில அரசுகள் அமல்படுத்தும் விதிகளையும் பள்ளிகள் முறையாக பின்பற்ற வேண்டும். அதை மீறினால் பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்.

மேலும், பள்ளிகள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் தங்கள் இணையதளப் பக்கத்தில் அங்கீகார விவரம், குறியீட்டு எண் உட்பட பல்வேறு அடிப்படை தகவல்களை பெற்றோா்கள் பாா்க்கும் விதமாக முகப்பிலேயே இடம்பெற செய்ய வேண்டும். மேலும், அரசு தரப்பில் பெறப்பட்ட கட்டட, சுகாதார, தீயணைப்பு சான்றிதழ்களின் நகல்கள், கல்விக்கட்டண விவரம், 3 ஆண்டுகளின் தோ்வு முடிவுகள் ஆகிய விவரங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி! சீனா வருத்தம்

பத்துக்குப் பத்து.. டி20 உலகக் கோப்பையில் முறியடிக்கக் காத்திருக்கும் 10 சாதனைகள்!

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து! 16 பேர் பலி

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT