முகப்பு
தமிழ்நாடு

பாதுகாப்பு உடை அணிந்து கரோனா நோயாளிகளிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணிந்து கரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
கரோனா நோயாளிகளை சந்திக்க பிபிஇ உடை அணியும் முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணிந்து கரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து இம்மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்குச் சென்ற அவர் இறுதியாக கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணிந்து நேரில் சென்று கரோனா நோயாளிகளிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகிறார். 

மேலும் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

தொடர்ந்து கோவை மாநகராட்சியில் ஒரு மண்டலத்திற்கு 10 கார் ஆம்புலன்ஸ்கள் வீதம் 5 மண்டலங்களுக்கும் சேர்த்து 50 கார் ஆம்புலன்ஸ்கள் சேவையை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.