தமிழ்நாடு

எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை: முதல்வர் வழங்கினார்

DIN

நவம்பர் 1-ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கும் வகையில் எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழங்கி சிறப்பித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (1.11.2021) தலைமைச் செயலகத்தில், நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்கும் வகையில், எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு நேர்வாக ஒவ்வொருவருக்கும் 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.

இந்திய நாடு விடுதலை பெற்ற பின்பு, 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்டபோது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரித்த போது, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர்.

அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக தமிழ்நாடு அரசு அனுசரிக்கும் வகையில், எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக ஒவ்வொருவருக்கும் 1 இலட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி, 110 எல்லைப் போராட்டத் தியாகிகளில், 14 பேருக்கு இன்று முதல்வர், 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். மற்ற எல்லை போராட்டத் தியாகிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாயிலாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT