தமிழ்நாடு

'தமிழகத்தில் 37% அதிகமாக வடகிழக்கு பருவமழை'

DIN

தமிழகத்தில் 37 சதவிகிதம் அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இது தொடர்பாக பேரிய அவர், அரியலூர், கோவை, ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருவாரூர், விழுப்புரம், ஆகிய 8 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவிகிதம் மழை பெய்துள்ளது.

கடலூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், இராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவண்ணாமலை தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய 19 மாவட்டங்களில் இயல்பை விட 20 சதவிகிதத்திற்கு மேல் மழை பெய்துள்ளது.

செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, இராமநாதபுரம், சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாகியுள்ளது என்று கூறினார்.

வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 90 அணைகளில், 58 அணைகள், 50 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT