தமிழ்நாடு

மழைக்காலம்: சென்னையில் அபாயகரமான மரங்கள் அகற்றம்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் அபாயகரமான நிலையில் இருந்த மரங்களை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.

இதுவரை கடந்த மூன்று மாதங்களில் 19,025 மரங்களின் கிளைகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள  பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளில் 34,224 சாலைகளில் சுமார் 1,75,309 மரங்கள் உள்ளன.  மாநகராட்சியின் சார்பில் பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 3  மாதங்களில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விழும் நிலையில் இருந்த  சுமார் 19,025 மரக்கிளைகள் மாநகராட்சி பணியாளர்களால்  அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் குறித்து 1913 என்ற உதவி எண்ணிற்கும், 044-2561 9206, 2561 9207 மற்றும் 2561 9208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும் புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT