ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலராக அமுதா ஐஏஎஸ் நியமனம்
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மத்திய அரசு பணியிலிருந்து தமிழகம் திரும்பிய அமுதா ஐஏஎஸ்-க்கு ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலராக தமிழக அரசு நியமித்திருக்கிறது.
மேலும் தொழிற்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக கிருஷ்னண் ஐஏஎஸ், தொழிற்துறையைக் கவனித்துக் கொண்டிருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மைச் செயலராகவும் , சந்திப் சக்சேனா நீர்வளத் துறையின் முதன்மைச் செயலராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.