தமிழ்நாடு

புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கான சென்டாக் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் உயர் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சென்டாக் மூலம் பெறப்படுவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் நவம்பர் 8-ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இதையும் படிக்க | புதுச்சேரியில் 75வது சுதந்திர தின விழா படகுகள் அணிவகுப்பு
 
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு, அரசு ஒதுக்கீடு, அனைத்து இந்திய நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு சேர்க்கைக்காக சென்டாக் இணையதளத்தில் (centacpuducherry.in) விண்ணப்பிக்கலாம் என, செண்டாக் நிர்வாகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 8 ஆம் தேதி முதல் நவம்பர் 22 ஆம் தேதி வரை பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT