சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு 
தமிழ்நாடு

சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (06.11.2021) வெளியிட்டார்.

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (06.11.2021) வெளியிட்டார்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ரிப்பன் மாளிகையில் இன்று வெளியிட்டார்.

சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள சாதாரண உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆண் வாக்காளர்களுக்காக 278 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 278 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5,266 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி, வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் 1 முதல் 15 வரை மற்றும் 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் வாக்களிக்கவிருக்கும் வாக்குச்சாவடி குறித்த விவரத்தை சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT