தமிழ்நாடு

சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

DIN


சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை பாதிப்பைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாலை நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில், ஆவின், பொதுப் போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு நாளை (திங்கள்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுப்பு அளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும், தனியார் நிறுவனங்களும், தற்போதைய மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, பணியாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தோ அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT