செய்யாறு அருகே கார் மீது வேன் மோதி விபத்து: தாத்தா, பேரன் சாவு
செய்யாறு அருகே திருமணத்திற்கு சென்ற கார் மீது வேன் மோதி விபத்து. தாத்தா பேரன் சாவு. 5 பேர் படுகாயம். செய்யாறு அருகே பரிதாப சம்பவம்
தமிழ்நாடுசெய்யாறு அருகே கார் மீது வேன் மோதி விபத்து: தாத்தா, பேரன் சாவு
செய்யாறு அருகே திருமணத்திற்கு சென்ற கார் மீது வேன் மோதி விபத்து. தாத்தா பேரன் சாவு. 5 பேர் படுகாயம். செய்யாறு அருகே பரிதாப சம்பவம்
செய்யாறு: செய்யாறு அருகே திருமணத்திற்குச் சென்ற கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் , தாத்தா பேரன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் மென்பொறியாளர் ஆவார். இவர் தாய், தந்தை உள்பட 7 பேர் ஒரே காரில் மாமண்டூர் கிராமத்தில் நடைபெறும் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரம் செய்யாறு சாலையில் மாமண்டூர் கிராமம் அருகே ஐந்து கண் பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தது, அதேப் போல் பெரணமல்லூர்
பகுதியில் இருந்து இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள கம்பெனிக்கு தொழிலாளர்கள் அழைத்து சென்ற வேன் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் மூன்று முறை உருண்டு சென்றது . இதில் காரில் பயணித்த இளங்கோவனின் தந்தை குழந்தைவேலு 65 . மகன் விஷ்வா 8 ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்து வந்த தூசி போலீசார் மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் காரில் இடிபாடுகளில் சிக்கி தவித்த தாயார் புஷ்பா 52, இளங்கோவன் (33), மனைவி சுகன்யா (30) மகள்கள் நிலா (5) கமலா (3) ஆகியோரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
செய்யாறு டி.எஸ்.பி .செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.