முகப்பு
தமிழ்நாடு

சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே

செங்கல்பட்டு -  கிழக்கு கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை வழக்கம்போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:32 AM
கோப்புப் படம்
பகிர்:

செங்கல்பட்டு - கிழக்கு கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை வழக்கம்போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் நகர மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.  

தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தண்ணீர் வெளியேற்றப்பட்டு ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால், சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

அனைத்து ரயில் நிலையங்களும் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அங்கு ரயில்களை மெதுவாக இயக்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →