தமிழ்நாடு

எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: முழு விவரம்

DIN

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக சனிக்கிழமை இரவுமுதல் பெய்த கனமழையாக் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இரவு முழுவதும் கடலூர், விழுப்புரம், சேலம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடர்வதால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி    பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை, திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT