தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.10ஆயிரம் கோடி வழங்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி. 
தமிழ்நாடு

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், மக்களவை உறுப்பினர் அலுவலக திறப்பு விழா வேடசந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

DIN

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், மக்களவை உறுப்பினர் அலுவலக திறப்பு விழா வேடசந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

அலுவலகத்தை திறந்து வைத்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலின்போது, நான்(ஜோதிமணி) வெற்றிப் பெற்றால் வேடசந்தூரில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன். அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வந்தாலும், வேடசந்தூர் அலுவலகத்தில் பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்தித்து குறை கேட்கப்படும். 

கடந்த காலங்களில் கரூருக்கு வந்தாலும், மக்களவை உறுப்பினரை சந்திக்க முடியாத நிலை இருந்தது. அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் ஆளுநர், தற்போதைய  வெள்ளப் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரி நிலுவையில் உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கான ஊதியம் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது.

 தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக மட்டும் ரூ.10ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். அதன் பின்னர், நிலுவையிலுள்ள நிதிகளையும் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது  சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காந்திராஜன் (திமுக), காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் சாமிநாதன், தர்மர் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!

கிஸ் டிரெய்லர்!

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!

தங்கத்தைப் போல் வரலாறு காணாத உச்சத்தை தொடும் வெள்ளி!

SCROLL FOR NEXT