தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடம்: அரசாணை வெளியீடு

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு  2.21 ஏக்கா் பரப்பளவில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

இதையடுத்து. நினைவிடம் அமைப்பது தொடா்பான பணிகள் குறித்து கடந்த செப்.17-ஆம் தேதி அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து, பொதுப்பணித்துறை தயாரித்த விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்கு முறை மண்டலம், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சில தினங்களுக்கு முன்னதாக அனுமதி அளித்தன. இதையடுத்து திட்ட மதிப்பீடு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலான நிலையில், கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான தமிழக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT