முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாள்கள் விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மேலும் இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 9 நவம்பர், 2021 at 3:00 PM
கோப்புப்படம்
பகிர்:

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மேலும் இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு தொடர் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக புதுச்சேரியில் நவ.8, 9 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரு தினங்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் நவ. 10, 11 ஆகிய இரு நாள்களும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

நவ. 8 ஆம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.