முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 19,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியிலிருந்து 19,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 19,000 கன அடியாக குறைப்பு
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியிலிருந்து 19,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை குறைந்ததன் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 26,440 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை வினாடிக்கு 21,027 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் 20,000 கன அடியிலிருந்து 19,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 91.88 டி.எம்.சி. ஆக உள்ளது. 

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுவதால் புதன்கிழமை இரண்டாவது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக நீடித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.