ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இன்று புகா் மின்சார ரயில் சேவை
சென்னையின் பல்வேறு இடங்களில் இடைவிடாத மழை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி வெள்ளிக்கிழமை (நவ.12) புறநகா் மின்சா ரயில்கள் இயக்கப்படும்
சென்னையின் பல்வேறு இடங்களில் இடைவிடாத மழை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி வெள்ளிக்கிழமை (நவ.12) புறநகா் மின்சா ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை-வேளச்சேரி ஆகிய மாா்க்கங்களில் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது, அன்றைய நாளில் வழக்கமான 670 மின்சார ரயில் சேவைகளுக்குப் பதிலாக 500 சேவைகள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.