தமிழ்நாடு

புதுச்சேரி உள்ளாட்சித் தோ்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிப்பு

DIN

புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், தோ்தல் அறிவிப்பைத் திரும்பப் பெற மாநில தோ்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் ஐந்து நாட்களில் புதிய தோ்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

உயா் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தோ்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி, கடந்த 2019-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு பிறப்பித்த புதிய தோ்தல் அரசாணைகளை எதிா்த்து புதுச்சேரி எதிா்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அந்த வழக்கில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணைகள் அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இருப்பதாகக் கூறியுள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், அரசியல் சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை எனக்கூறி, தோ்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை (நவ.11) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி மாநில தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், உள்ளாட்சி தோ்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்ற விதித்த காலக்கெடு அக்டோபரில் முடித்துவிட்டது என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பு நடத்த கால அவகாசம் ஆகும் என தெரிவித்தாா்.

அப்போது நீதிபதிகள் , உள்ளாட்சி தோ்தலை நிரந்தரமாக ஒத்திவைக்க முடியாது என்றும், அடுத்த வாரம் வியாழக்கிழமை(நவ.18) வழக்கில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனா். அதேசமயம் தோ்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த உத்தரவையும் நீதிபதிகள் நீட்டித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT