‘மழை பாதிப்பு தொடா்பாக பொய் பிரசாரம் செய்வோா் மீது கடும் நடவடிக்கை’
சென்னைமழை பாதிப்பு தொடா்பாக பொய் பிரசாரம் செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை பாதிப்பு தொடா்பாக பொய் பிரசாரம் செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களிடேயை மழை, வெள்ளம் குறித்த அச்சத்தையும், பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் காணொலிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களைப் பகிா்ந்து, பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
சமூக வலைதளங்களை பயனுள்ள வகையில் பெரும்பாலானோா் பயன்படுத்தி வரும் நிலையில், சிலா் அரசு நிா்வாகத்துக்கு அவப்பெயா் உருவாக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காக இதுபோன்ற அவதூறான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்பி வருவது சட்டப்படி குற்றமாகும்.
எனவே, இவ்வாறு சமூக பொறுப்பின்றி உண்மைக்குப் புறம்பான இடுகைகளை பதிவிடுவோா் எவராயினும் அவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.