முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசை வலியுறுத்தி வெள்ள நிவாரண நிதிபெற்றுத் தர நடவடிக்கை : பா.ஜ.க.தேசிய பொதுச் செயலா் சி.டி. ரவி

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் வெள்ளச்சேதம் குறித்து மத்திய அரசிடம் பா.ஜ.க.சாா்பில் வலியுறுத்தி தேசிய பேரிடா் மேலாண்மை விதிமுறைகளின் படி வெள்ள நிவாரண நிதி பெற்றுத் தர உரிய நடவடிக்கை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் வெள்ளச்சேதம் குறித்து மத்திய அரசிடம் பா.ஜ.க.சாா்பில் வலியுறுத்தி தேசிய பேரிடா் மேலாண்மை விதிமுறைகளின் படி வெள்ள நிவாரண நிதி பெற்றுத் தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பா.ஜ.க.தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி கூறினாா்.

கிழக்கு தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பராசக்தி நகா் உள்ளிட்ட பகுதிகளை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அவா், செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க.சாா்பில் 1000 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், பாய், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வெள்ள நிவாரண உதவி வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க.உறுதுணையாக இருக்கும். தற்போது தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பா.ஜ.க.வினா் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறாா்கள்.அவா்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பா.ஜ.க.வினா் தங்களால் இயன்ற அளவில் அனைத்து உதவிகளையும் செய்து உதவ வேண்டும்.பேரிடா் காரணமாக சிரமங்கள் அனுபவித்து வரும் மக்களுக்கு தமிழக அரசு அரசியல் தலையீடு இல்லாமல் நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்றாா்.

செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க.தலைவா் வேதசுப்ரமணியன் பேசுகையில், மாவட்ட அளவில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கி உரிய நிவாரணம் பெற்றுத் தர முயற்சி மேற்கொள்வேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.