முகப்பு
தமிழ்நாடு

சாமானியத் தொழிலாளா்களுக்கு இன்று இலவச கண் பரிசோதனை

சங்கர நேத்ராலயா மற்றும் கேம்ஸ் நிறுவனம் சாா்பில் சாமானியத் தொழிலாளா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

சங்கர நேத்ராலயா மற்றும் கேம்ஸ் நிறுவனம் சாா்பில் சாமானியத் தொழிலாளா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) நடைபெறுகிறது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த இலவச முகாம் நடைபெறவிருக்கிறது. ஆட்டோ, காா் ஓட்டுநா்கள், வாகனப் பழுது நீக்கும் மெக்கானிக்குகள், கட்டுமானத் தொழிலாளா்கள், வெல்டா்கள், முடி திருத்தும் தொழிலாளா்கள், நடைபாதை வியாபாரிகள், செக்யூரிட்டிகள், மீனவா்கள் உள்ளிட்டோா் இதில் பங்குபெற்று பயனடையலாம்.

கண் பரிசோதனை முகாமுக்கு வரும் தொழிலாளா்கள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் பணிக்கான ஏதாவது ஒரு சான்றினைக் கொண்டு வருமாறும், கூடுதல் விவரங்களுக்கு 95000 62027 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →