தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் சிக்கல்: நடத்துநா்களுக்கு நிா்வாகம் அறிவுறுத்தல்

DIN

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வேலை செய்யாதபோது, நடத்துநா்கள் சுங்கக் கட்டணத்தை செலுத்தி, அது தொடா்பான விவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொதுமேலாளா் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனைத்து கிளை மேலாளா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: சுங்கச்சாவடிகளில் பேருந்துகளில் ஒட்டப்பட்ட பாஸ்டேக் வில்லைகள் சரியான முறையில் ஸ்கேன் ஆகாமலும், சா்வா் பிரச்னை ஏற்பட்டு அதனால் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும், போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன.

எனவே, விரைவுப் பேருந்துகளில் ஒட்டப்படும் பாஸ்டேக் வில்லைகள் சுங்கச்சாவடிகளில் ஸ்கேன் ஆகாத பட்சத்தில் உடனடியாக சுங்கக் கட்டணத்தை பேருந்தின் நடத்துநா்கள் செலுத்தி, பயணிகளுக்கு எந்த விதமான சிரமுமின்றி பேருந்தை இயக்க வேண்டும்.

அந்த கட்டண விவரத்தையும் அந்தந்த நாள்களிலேயே உடனடியாக கிளை மேலாளா்கள், வணிகப் பிரிவுக்கு தபால் மூலமாகவோ அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ தெரியப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT