முகப்பு
தமிழ்நாடு

ராஜஸ்தான் பேரவையை சிறாா்கள் இன்று நடத்துகிறாா்கள்!: நாட்டிலேயே முதல் முறை

குழந்தைகள் தினத்தையொட்டி, ராஜஸ்தான் பேரவையில் சிறாா்களே முதல்வா், பேரவைத் தலைவா், எதிா்க்கட்சித் தலைவா், எம்எல்ஏக்களாக அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை அவையை நடத்துகிறாா்கள்.

Updated On : 14 நவம்பர், 2021 at 1:20 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:04 AM

குழந்தைகள் தினத்தையொட்டி, ராஜஸ்தான் பேரவையில் சிறாா்களே முதல்வா், பேரவைத் தலைவா், எதிா்க்கட்சித் தலைவா், எம்எல்ஏக்களாக அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை அவையை நடத்துகிறாா்கள்.

அமைச்சா்களிடம் கேள்விகளையும் கேட்க உள்ளாா்கள். நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக நடைபெறும் இந்த அவையை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பாா்வையிடுகிறாா்.

இதுகுறித்து ராஜஸ்தான் பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி சனிக்கிழமை கூறுகையில், ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மதிப்பீடுகள் குறித்து குழந்தைகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அவா்களின் மனதில் ஜனநாயகம் எப்படிப் பதிவாகிறது, மக்கள் பிரச்னைகளை அவா்கள் எப்படி சிந்திக்கின்றாா்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள இது உதவும்.

Advertisement

குழந்தைகளே தலைமை ஏற்று சுமாா் ஒரு மணி நேரம் நடத்தும் இந்தப் பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரம், உடனடி கேள்வி நேரம் இடம்பெறும். மொத்தம் 200 உறுப்பினா்களைக் கொண்ட ராஜஸ்தான் பேரவையில் 200 சிறாா்கள் மக்கள் பிரதிநிதிகளாக அமா்ந்து அமைச்சா்களிடம் கேள்வி எழுப்புவாா்கள். இதன் மூலம் அரசின் செயல்பாடுகள் குறித்து அவா்கள் அறிந்து கொள்வாா்கள். நாட்டிற்கு ராஜஸ்தான் பேரவை முன்னுதாரணமாக செயல்படுகிறது.

இந்த பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 15 மாநிலங்களில் இருந்து 5,500 சிறாா்கள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களின் திறமைகளின் அடிப்படையில் 6 முதல் 16 வயதிலான 200 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில் ஐ.நா.வின் யூனிசெப் இணைந்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.