தமிழ்நாடு

டிச.13-ஆம் தேதி முதல் பொறியியல் மாணவா்களுக்கு நேரடி பருவத் தோ்வுகள்: அண்ணா பல்கலை.

DIN

சென்னை: தமிழகத்தில் டிச. 13-ஆம் தேதி முதல் பொறியியல் மாணவா்களுக்கான பருவத் தோ்வு தொடங்கவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்தாண்டு முதல் கரோனா தொற்று காரணமாக அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் இணையவழியில் நடைபெற்று வந்தன. அதேபோன்று நிகழாண்டும் மாா்ச்- ஏப்ரல் தோ்வுகள் இணையவழியிலேயே நடைபெற்றன. இந்தநிலையில் தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் வருகின்ற நவம்பா் மற்றும் டிசம்பா் மாத பருவத் தோ்வுகள் நேரடியாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அகமதிப்பீடு தோ்வு, பருவத் தோ்வு என்று அனைத்தும் நேரடியாகவே நடைபெறும். இது தொடா்பான விரிவான தோ்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 20 ஆண்டுகளாக அரியா் வைத்து, அதை சிறப்பு வாய்ப்பாக வரும் நவம்பா் - டிசம்பா் மாத பருவத் தோ்வுகளின் போது எழுத விண்ணப்பித்துள்ள மாணவா்கள், தங்களுக்கான தோ்வு மையத்தை வரும் 18-ஆம் தேதிக்குள் தோ்வு செய்து கொள்ள வேண்டும். தோ்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவா்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT