தமிழ்நாடு

வேலூரில் பொதுப்பணித் துறை கட்டட அலுவலகத்தை முதல்வர் திறந்துவைத்தார்

DIN

வேலூர் மாவட்டம், காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக முதல்வர் திறந்துவைத்தார். 

இவ்வலுவலகக் கட்டடம் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 6,495 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மின் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் சேகரிப்பு வசதி, சுற்றுச்சுவர் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்) இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT