தமிழ்நாடு

வேதாரண்யம்:அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் குடைகள்

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களுக்கு தன்னார்வலர்களால்  குடைகள் இலவசமாக இன்று (நவ.16) வழங்கப்பட்டன.

தகட்டூர் ஊராட்சி, ராமகோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 67 மாணவ, மாணவியர்களுக்கு வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு குடைகள் வழங்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த  தன்னார்வலர்களான ஹரிஸ் தங்க நகைக் கடை உரிமையாளர்கள்  கிருஷ்ணன், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொந்த செலவில் வாங்கி வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் தனசேகரன் தலைமை வகித்தார்.  தலைமையாசிரியர் (பொ) சுப்ரமணியன், பள்ளிக் குழுவினர், கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT