முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 782 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 782 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 782 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 782 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,17,203 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 907 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கும், கோவையில் 115 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.