தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் இருந்து நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரிடர் மேலாண்மை ஆணையம் பகிர்ந்துள்ள வானிலை மையத்தின் அறிக்கையில்,

“அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்னாமலை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், சேலம், கோயம்பத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை  பெய்ய வாய்ப்புள்ளது.”

இந்த அறிக்கையானது நவம்பர் 17 பிற்பகல் 3.45 மணிக்கு பகிரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT