தமிழ்நாடு

கார்த்திகை மாதம் பிறப்பு: மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணி விழா 

DIN

மானமதுரை: ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் புதன்கிழமை பிறந்ததை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். 

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே ஊரெங்கும் ஐயப்பனின் சரண கோஷம் கேட்கத் தொடங்கிவிடும். இந்த சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதம் புதன்கிழமை பிறந்ததையொட்டி மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சபரிமலை செல்ல மண்டல விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் கூறி விரத மாலை அணிந்து கொண்டனர். 

மானாமதுரை அண்ணாசிலை அருகேயுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு புனிதநீர் கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதன்பின் கலச நீராலும் அபிஷேகப் பொருள்களாலும் ஐயப்பனுக்கும் பதினெட்டாம் படிக்கும்  அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 

ஐயனுக்கும் கோயில் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இருமுடி தாங்கி சபரிமலை செல்ல உள்ள ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு வந்து தர்ம சாஸ்தாவுக்கு தேங்காய் பழத்துடன் பூஜைகள் நடத்தி குருசாமிகளின் கையால் சரணகோஷம் கூறி விரத மாலை அணிந்து கொண்டனர். 

மானாமதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலிலும் ஐயப்ப பக்தர்கள் பூஜைகள் நடத்தி விரத மாலை அணந்து விரதம் தொடங்கினர். 

மேலும் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் விநாயகர் கோயில்களிலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். 

இதையும் படிக்க கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: காவல்துறை வேண்டுகோள்

திருப்புவனம், இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்  தங்களது பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களிலும் பிற கோயில்களுக்கும் சென்று பூஜை நடத்தி வழிபாடு செய்து விரத மாலை அணிந்தனர். 

இளையான்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் விரத மாலை அணிந்து விரதம் தொடங்கினர். 

மானாமதுரை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து தை மாதம் ஒன்றாம் தேதி வரை தினமும் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்படும். 

மேலும் மண்டல காலம் முடியும் வரை கோயிலில்  ஐயப்பனுக்கு உகந்த புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு ஐயப்ப பக்தர்கள் கூடி பஜனைகள் நடத்தி கோயிலில் அன்னதானம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் க்ளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT