தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு: அமித் ஷாவை சந்தித்து ரூ. 2,079 கோடி நிவாரணம் கோரினார் டி.ஆர்.பாலு

DIN

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ. 2,079 கோடி நிவாரணம் வழங்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு புதன்கிழமை கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் சென்னை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் தில்லி சென்றுள்ள திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான கோரிக்கை வைத்தார்.

அப்போது, தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக மொத்தம் ரூ. 2,079 கோடி தேவை என்றும் முதற்கட்டமாக ரூ. 550 கோடி விடுவிக்க கோரியும் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT